Wednesday, December 8

                 எமது இந்தியாவின் எதிர்கால இலட்சியங்கள் எல்லாமே எமக்கு மகிழ்ச்சி ஊட்டும் விதமாகத்தான் இருக்கிறது. இருக்காதா பின்னே...நான் இந்தியன் என்று உரக்க உலகுக்கு சொல்வதற்கு, என்னால் ஆன உதவியை எம் இந்தியாவின் இலட்சியத்திற்காக செய்ய என்னை எமது இந்தியாவின் லட்சியம் தூண்டிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு பெருமைகள் வாய்க்க பெற்ற நாடு எம்நாடு. பல நூற்றாண்டு காலங்கள் எழுதிக்கொண்டே,பேசிக்கொண்டே இருக்கலாம் எம்நாட்டின் பெருமையை. 
                             சமீபத்தில் ஒரு மாத இதழில் அருந்ததி ராய் என்ற ஒரு தீவிரவாதியின் எழுத்துக்களை படிக்கும் பேறு கொண்டேன். " காஷ்மீரில் 68000 பேரை கொன்ற நாடு எப்படி ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடியும்? குஜராத்தில் 2500 ( ? ) பேரை இனப்படுகொலை செய்த நாடு எப்படி ஒரு மதசார்பற்ற நாடக இருக்க முடியும்? " என்று எமது இந்தியாவின் இறையாண்மையையே கேலிக்குரியதாக ( கேள்விக்குரியதாக ) மாற்ற பாடுபடும் இந்த தீவிரவாதியை எம் தேசம் பெற்றிருந்தாலும்,எம்தேசம் ஆங்கிலேயனால் அடிமைப்பட்டு கிடந்த போதுஅடக்குமுறையை கண்டு அஞ்சாமல் ஆங்கிலேயனை எதிர்த்த எம்தேச தீவிரவாதிகளையும், அவர்கள் இருக்கும் இடங்களையும் ஆங்கிலேயர்களுக்கு அறிமுகப்படுத்தி ( ? ) வைத்த எம் மேண்மைமிகு தேச பக்தர் திரு குருஜி வீர் சாவர்க்கர் போன்றவர்களையும் வரப்பிரசாதமாய் பெற்றது தானே எம்நாடு. இருக்காதா பின்னே தேச பக்தரின் தேச பக்தியை பறைசாற்றுவதற்காக தானே எம் நாட்டின் இறையாண்மையின் கருவறையாய் ( ? ) இருக்கின்ற பாராளுமன்றத்திலேயே படம் திறந்து ஆற்றிய பங்குகளையும் சொல்கின்றனர் எம் நாட்டின் இந்நாள் தேச பக்தர்கள். 
                               இது போன்ற தகுதிகளை தன்னகத்தே கொண்ட பல தேச பக்தர்களை உள்ளடக்கியது எம்நாடு. உலகிலேயே எந்த மனிதர்களும் தீண்ட முடியாத இடமாய் இருக்கும் கருவறையிலேயே தீண்டியது மட்டுமல்லாமல் நோண்டியும் எடுத்த எம் பெருமை மிகு சேவகர்களை கொண்ட தலைவரை எந்த குற்றமும் அறியாதவர் என்றும்,எந்த குற்றத்திற்கும் துணை போக வில்லை என்றும் நடுநிலையான தீர்ப்பு வழங்குமாறு அறிவுரை செய்த  விசாரணைக்குழுவில் எத்தனை எத்தனை எம்தேசத்தின் பக்தர்கள்.
                             எம் தேசத்தின் தேவையற்ற சுமைகளாய் இருக்கும் மனிதர்களை ( ஒரு சமயம் இவர்களும் தேசதுரோகிகளோ என்னவோ )....., அடித்து துரத்திய ஆங்கிலேயனை கொண்டு, அழித்து கொன்று, அரவணைத்து அழகாய் அனுப்பிய தேச பக்தர்களும் எம் நாட்டில் உண்டு. இந்த தேசிய பக்தி செயலை பல ஆண்டுகளுக்கு பிறகு பண்பட்ட அறிவுடன் பரிந்து முடிவுரை எழுதிய அண்ணல் அம்பேத்கர் உருவாக்கியதில் மேதைகளாகவும் அரசர்களாகவும் உள்ள தேச பக்தர்களையும் எம்நாடு கொண்டுள்ளது. 
                            மனைவியின் சுகத்தை பெற்று,பிள்ளைகளின் அன்பைப் பெற்று வாழும் தேச துரோகிகளுக்கு மத்தியில், எம்நாடே மனைவி, எம்நாட்டின் மக்களே எம் பிள்ளைகள், என்று  எந்நேரமும் என்நாட்டுக்காக உழைத்துக்கொண்டு இன்னும் அதிகமாய் அழிப்பதற்காக...........மன்னிக்கவும், உழைப்பதற்காக பிரதமர் ஆக வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருக்கும் மக்கள் தொண்டர் திருஜி லால் கிருஷ்ண அத்வானி போன்ற தேச பக்தர்கள்.
                               மண்ணின் மைந்தர்கள் என்று சொல்பவர்களுக்கு விண்ணில் தான் இடமுண்டு என்று மிருதுவான முறையில் மண்ணுக்குள் புதைத்து விண்ணுக்கு அனுப்பியும், மற்றவர்களின் தாயகத்தை தான் தாயகமாய் மாற்றிய உலக பக்தர்கள் இஸ்ரேலியர்களை போன்று தான் நாமும் செய்ய வேண்டும் என்று மிக சிறந்த உதாரணத்தை ரத்தங்களுக்கு சொல்லும் எம் தேசபக்த தலைவர்கள்.
                              உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொகுசாக நடைதெருவில் சுற்றி திரிந்து வாழும் மனிதர்களுக்கு மத்தியில்,உண்ணுவதற்கு உலகிலேயே தலைசிறந்த உணவு,உடுப்பதற்கு மிக அழகான உடுப்பு இருந்தும் எளிமையாய் என்றுமே தோன்றும் திரு பால் தாக்கரே போன்ற தேச பக்தர்கள்.
                            தம் தாய் மண்ணிற்காக போராடுகிறோம் என்ற தவறான கொள்கையுடன் போராடும் தீவிரவாதிகளுக்கு  மத்தியில், தம் தேசத்திற்காக கற்பழிக்கிறோம், தம் தேசத்திற்காக ஊனப்படுதுகிறோம்,தம் தேசத்திற்காக கொலை செய்கிறோம் என்று எம்மக்களுக்காக போராடும் எம் ராணுவ தேச பக்தர்கள்.
                           தேவை இல்லாத சுமைகளை எம்நாட்டின் மடியில் இருந்து தூள் தூளாக சிதறடித்து அகற்றிய தேச பக்தை செல்வி பிரக்யா சிங் போன்றவர்களை சுட்டிக்காட்டிய தேச துரோகி ஹேமந்த் கர்கரேயை எம் பரிசுத்த தேசத்திலிருந்து அகற்றி தன்னைக்கூட விளம்பரப் படுத்திக் கொள்ளாத எம் தேச பக்தர்கள்.
                          அடுத்த நாட்டைக் காட்டிகொடுத்து தன் நாட்டில் வெகுமதி பெற்றும் அடுத்த நாட்டையே தன் நாடகக் கருதி சகல சௌபாக்கியங்களுடன் எம்நாட்டில் வாழும் திரு சுப்ரமணிய சுவாமி போன்ற தேச பக்தர்கள்.
                            தன் நாட்டிற்கு அற்பனிப்பதர்க்காக தனது உழைப்பான தனது சொத்தை பிரிக்கும் போது கொலையுண்ட திரு பிரமோத் மகாஜன் போன்ற தேச பக்த ஆத்மாக்கள்.
                             எங்கு தடை செய்யப்பட்டாலும் எம் நாட்டின் வாசற்கதவை திறந்து பன்னாட்டு கம்பெனிகளின் பரிசோதனைக் கூடமாய் எம் நாட்டை மாற்றிய வெள்ளை உடுப்பு தேச பக்தர்கள்.
                           அதிக அதிகமாய் குளு குளு மலையிலே கொஞ்சும் மேகங்களுக்கு  இடையில் எம்தேச மக்களின் நலனுக்காக ரத்தம் சிந்தி உழைக்கும் ரத்தத்தின் ரத்தக்களாய் இருக்கும் தேச பக்தைகள்.
                          எம் நாட்டின் கடனை அடைத்து எம்நாட்டு மக்கள் நிமிர்ந்த தலையுடனும்,நேரான பார்வையுடனும் உலக அளவில் மதிப்பு மிக்கவர்களாய் இருக்க எமக்காகவும்,எம் தேச மக்களுக்காவும் தன் சொந்த உழைப்பில் ஈட்டியதை சுவிஸ் வங்கியில் சேமிக்கும் எம் அரசியல் தேச பக்தர்கள்,
                            இதைபோன்று பலதரமான தரமான வாழ்ந்த தேச பக்தர்களையும்,வாழ்ந்துக்கொண்டிருக்கிற தேச பக்தர்களையும் ,முன்மாதிரியாக கொண்டு இன்னும் சம இடங்களில் இதே போல மிக உயர்ந்த குணமுள்ள தேச பக்தர்களை பார்த்துக்கொண்டே எம் நாட்டின் லட்சியத்தை அடைய கனவு காண்கிறேன் நான்..........2020 - ல் எம்நாடு இது போன்ற தேசபக்தர்களை உள்ளடக்கிய வல்லரசாக......?
                 மறந்தே போய் விட்டேன் நான் இந்த கட்டுரைக்கு தலைப்பிடுவதற்க்கு,அதனால் தான் கடைசியில் தலைப்பிடுகிறேன்......
வல்லூறுகளின் வல்லரசு..........( எம்நாடு 2020 - ல் )

அணையும் நேரத்தை 
அன்புடன் அழைக்கும் ...இனா ஆனா 
அன்வர்தம்பி  

Friday, December 3

என் நண்பர் ஒருவரிடம் நான் கலந்துரையாடியபோது
எம் மக்களிடம் ஒற்றுமை இல்லை
எம் மக்களுக்கு உரிமை இல்லை
எம் மக்களிடம் உணர்வு இல்லை
எம் மக்களின் விடியலில் வெளிச்சம் இல்லை
என நான் ஆதங்கப்பட்டபோது நண்பர் சொன்னார்
சந்தாதாரர் ஆகிவிடுங்கள் உங்கள் கையில்
மாதந்தோறும் கிடைக்கும் பத்திரிக்கை வடிவில் என்றார்
எல்லாமே வெறும் பேப்பர்களில் இருப்பதால்தானோ என்னவோ
கைகள் வரை மட்டுமே அது இருந்து விடுகிறது.
ஆனால் சமூகத்திற்கு...............
பிறகு எங்கே எம்மக்களுக்கு உரிமையை தேடி தந்து
ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி
எம்மக்களின் வைகறையிலே வெள்ளி தருவார்கள்
எம் சமூக தலைவர்கள்....................

Thursday, December 2

2012 SIGNS- PLANET NIBIRU'S ARRIVAL

உலக முடிவின் போது சூர் ஊதப்படும் அப்பொழுது மலைகள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்தும் பஞ்சு பஞ்சாக பறக்கும் என்று இறைவன் கூறுகிறான்.....அறிவாளிகளின் பிரதிநிதிகளாய் தன்னை காட்டிக்கொள்ளும் தலைவமுட்டாள்களே....
இந்த உலகம் ஒரு நாள் முடிவு பெறும்.....மறுமையை,இறப்பின் பிந்தைய வாழ்க்கையை நினைத்து கொள்ளுங்கள்....


.
.

Wednesday, November 24

செல்போன்கள்... ஜாக்கிரதை! 

எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.

வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக  மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது. 
செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள்.

செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.  விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.

கோபுரங்களால் கோடி தொல்லை

செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக  ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான்.  கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.

கழிவறைகளில்...

யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது.   தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர்.

இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள் என்றில்லை, பேருந்து நிலையம்,  மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.

காவல்துறை சொல்வதென்ன?

செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை  உயர்ந்துள்ளது. முழு சுகம் வேண்டுமா? தொடர்பு கொள்ளவும் என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர்,  உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் விற்பதற்கில்லை என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.

வெறும் 2 நிமிடங்கள்தான்

சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான்.

யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றார்.

எச்சரிக்கை அவசியம்

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். ஐஈஎம்ஐ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’ என்றார்.


செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு

செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும்.  ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.

செல்போனில் ‘நீலம்’

செல்போன் வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். த்ரில்லுக்காக எடுக்கும் தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக் காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர். அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம் மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த விஷயம் வீட்டில் தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும் செக்ஸ் வீடியோக்களால் இந்த பிட் திரையரங்குகள் நலிந்து விட்டன. 

ஆண்மைக்கும் ஆபத்தா...

பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது. செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது. செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை’’ என்றார்.

செல்போன் போதை

வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம்  கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் விஜயகுமார்

Monday, November 15

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதஹு .................

அன்பு சகோதரர்கள்  அனைவருக்கும் 

என் இனிய ஈத் உல் அல்ஹா பெருநாள் வாழ்த்துக்கள்....... 

இந்த நன்னாளை நாம் அனைவரும் நம் குடும்பத்தினரோடும் 

நம் நண்பர்களோடும் கொண்டாடுவோமாக...........

இனி வரும் காலங்களிலாவது 

சேர்ந்து கொண்டாட முயற்சி செய்யும் சகோதரர்களுக்காக.....................

துஆ செய்யும் சகோதரன்................
இ.அ.அன்வர்தம்பி ..................   .

Saturday, October 30

உன்னைக் கட்டிப்பிடிக்கும்
காலங்களில் விடுதியில்
விட்டுச்சென்றாய்- என்னைப்
படிப்புக்காக விற்றுச்சென்றாய்!

என் கால்கள் இரண்டும்
உனக்காக முண்ட;
கத்தி அழுதேன் நீயோ
உன் காதை பொத்திச்சென்றாய்;
விழியால் கதறிச் சென்றாய்!

இருள் சூழ்ந்த இரவில் உன்
அணைப்பிற்கு ஏங்கி அழுவேன்;
உன்னால் தலைக்கோதி
இமைமூட வேண்டிய என்னை;
கம்புடன் கண்ணை மூடச்சொல்லும்
விடுதி ஊழியன்!

அழுது அழுது
அழுத்துப்போன;
கனத்துப்போன மனம் - இனி
விடுப்பேக் கிடைத்தாலும்
விருப்பமில்லை
வீட்டிற்க்குச் செல்ல!

பழகிப்போனப் பிரிவோ
எனக்கு மரத்துவிட்டது;
உங்களைக் காணத் தடுத்துவிட்டது!

விண்ணப்பம் என்று
ஒன்றுமில்லை;
விருப்பமிருந்தால செய்யுங்கள்
அனுப்பி விடாதீர்கள் தம்பியையும்
பள்ளி விடுதிக்கு!
 
 

Sunday, October 17

அக்கரை இக்கரை வாழ்க்கை

 





ஊர்முழுக்க நடந்து
உறவுக்கார வாசல்தட்டி
இரவல் பணம்வாங்கி
கண்ணீர்த் துளிகளில்
உறவுகள் வழியனுப்ப
திரவியம் தேடி
கடல்கடந்த பயணம்
சுட்டெரிக்கும் கதிரவன்
சுற்றிவரும் அனல்காத்து
வீதியெல்லாம் வெந்தமணல்
புலரியில் புறப்பட்டு
சாயங்காலம் கூடுதிருப்ப்ம்
இரைதேடிப் பறவைகள்போல்
மரமில்லா காட்டுல
ஒட்டகம் மேச்சும்
ஆள்தெரியா உயரத்தில
கட்டிடம் கட்டியும்
ரோட்டோர குப்பைகளை
பொருக்கி சுத்தம்செய்தும்
குளிர்பெட்டி அறைக்குள்ள
அசையாம குத்தவசும்
ராத்திரி பகல்
ஓடுறது தெரியாம
தாய்தந்த உசிரைசும்
நாடுதந்த அறிவையும்
அடுத்தவனுக்கு அடியரவச்சு
மாசப்பொரப்பில வாங்கிற
சம்பள பணத்தை
இரவலுக்கு தவணையும்
வீட்டுச் செலவுக்கும்
பிரித்து அனுப்பி மீதத்த
மாச சாப்பாட்டிற்கெடுத்து
வருஷங்கள் கடத்தி
கிடைக்கிற விடுப்பில
சிறைகளை உடைத்து
தாய்நாட்டுப் பயணம்
யார் இந்த மாமான்னு
பெத்தபுள்ள கேட்கையில
நெஞ்சுகொதிக்க வாரியணைத்து
இறந்தவங்க பொறந்தவங்க
விசேஷங்கள் கேட்டும்
சொந்த மண்ணில
ஊரோடும் உறவோடும்
நாட்களை எண்ணி
உறவாடிக் கொண்டு
மீண்டும் சிறைதேடி
தொடரும் பயணமுடிவில்
தேடியதையும் துலைத்ததையும்
கூட்டிப் பார்கையில்
பருவங்கள் உதிர்ந்தும்
குருதிநாளங்கள் சுண்டியும்
நோய்கள் சிறைபிடித்தும்
சேர்த்த பேங்க் பணத்தில
உணவாக மருந்துண்டு
மாளிகை வீட்டில்
மரணம் வரும்வரை
மீத வாழ்க்கை

ஆறு கடமைகள்

 

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)அவர்கள்


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. (அதாவது ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன)

""அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று வினவப்பட்டது. அண்ணலார் பதிலளித்தார்கள்: ""நீர் உம் முஸ்லிம் சகோதரரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட(அறிவுரை கூறிட) வேண்டும் என்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும் (அறிவுரை கூறுவதும்), அவருக்குத் தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால் அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்றுவிட்டால், அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய "ஜனாஸா'வுடன் செல்வதும் தான் அவருக்கு உம்மீதுள்ள உரிமைகளாகும். (அதாவது அவருக்கு நீர் ஆற்றவேண்டிய கடமைகளாகும்)'' (முஸ்லிம்)

 1. "ஸலாம்' உரைப்பதன் பொருள் வெறுமனே "அஸ்ஸலாமு அலைக்கும்' எனும் சொற்களை மொழிந்து விடுவதல்ல. "ஸலாம்' உரைப்பது ""என் தரப்பிலிருந்து உம் உயிர், உடைமை, மானம் ஆகிய அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன; நான் எந்த வழியிலும் உமக்கு எந்தத் துன்பமும் இழைத்திட மாட்டேன்; அல்லாஹ் உம் தீனையும்(நெறியையும்), ஈமானையும்(நம்பிக்கையையும்) பாதுகாப்பாக வைக்கட்டும். இன்னும் உம்மீது அல்லாஹ் தனது கருணையைப் பொழிந்திட நான் பிரார்த்தனையும் செய்கின்றேன்,'' எனப் பிரகடனமும் வாக்குமூலமும் அளிப்பது.

2. தும்மலுக்கு பதில் கூறுதல் என்பதன் பொருள் தும்முபவனுக்கு நலம் நாடும் வார்த்தைகள் கூறுவதாகும். தும்முகிறவர் "புகழ் அனைத்தும் இறைவனுக்கே!' எனக் கூறுகின்றார். இதைக் கேட்கும் சகோதரர் "யர்ஹமுகல்லாஹ்' என்று அவருடன் சேர்ந்து பிரார்த்திக்கிறார். அதாவது ""அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்; மேலும், தனக்கு அடிபணியும் பாதையில் உம் பாதங்களை அல்லாஹ் உறுதியாக நிலைபெறச் செய்வானாக! மேலும் மற்றவர் எள்ளி நகையாடிட வாய்ப்பளிக்கும் எந்தத் தவறும் உம்மிடம் நிகழாதிருக்குமாக!'' எனும் பொருள்பட அவருடன் சேர்ந்து பிரார்த்திக்கின்றார்.

அறிவிப்பாளர்: உக்பா பின் ஆமிர்(ரலி)அவர்கள்

நான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ""ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்; எனவே, ஒரு முஸ்லிம் தம் சகோதரருக்கு ஒரு பொருளை விற்கும் போது, அதில் குறை இருந்தால் அந்தக் குறையைத் தெளிவாக எடுத்துச் சொல்லி

விடட்டும். குறையை மறைப்பது ஒரு முஸ்லிம் வணிகருக்கு கூடாத செயலாகும்.

(இப்னு மாஜா)

அறிவிப்பாளர்; ஆயிஷா(ரலி)அவர்கள்

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

""நற்குணமும், நன்னடத்தையும் உடைய முஸ்லிம்களிடம் எப்போதாவது தவறுகள், பிழைகள் நிகழ்ந்தால் அவற்றை மன்னித்து

விடுங்கள்! இறைவரம்புகளை மீறிய செயலைத் தவிர!'' '(அபூதாவூத்)

 ஒரு மனிதர் நல்லவராகவும், இறையச்சமுடையவராகவும் விளங்குகின்றார்; இறைவனுக்கு மாறு செய்வதில்லை எனில் அத்தகைய மனிதர் எப்போதாவது தவறிப்போய், ஒரு பாவத்தில் வீழ்ந்து விட்டால், அதன்

காரணத்தால் அவரை உங்கள் மதிப்பான பார்வையிலிருந்து வீழ்த்திவிடாதீர்கள். அவரைக் கண்ணியக் குறைவாக நடத்தாதீர்கள். அவருடைய அந்தத் தவறைப் பரப்பித் திரியாதீர்கள். மாறாக, அவரை மன்னித்து விடுங்கள். அவர் ஷரீஅத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பாவத்தைச் செய்து விட்டால் மன்னிக்கப்பட மாட்டாது.(எடுத்துக்காட்டாக விபச்சாரம், திருட்டு போன்றவை)
 
 
நன்றி......................

Friday, October 8

அம்மா உன்னை நேசிக்கிறேன்....

 


இந்த உலகில் எத்தனையோ உறவுகள் பேனப்படுகின்றன. உறவுகளின் பின்னளில்தான் நமது வாழ்வு முறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு.
இன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப் பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..?ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு ( Father is a Faith but Mother is a Fact ) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம். நமது தாய் சொன்னால்தான் தந்தை யார்ரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்க்கையாகவே ஒரு பினைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது.
எத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக் கனைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்ட்டு எனக்கு விடையளிப்பாள், அப்போது அவளிம் ஸ்பரிசம் எனக்கு விளங்கவில்லை. கடையில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம் பிடிப்பேன், தன்க்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு தொகையில் எங்கள் குடுப்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக சிலவளிப்பாள் எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருல் கிடைத்த மகிழ்ச்சித்தான் என்னை சுற்றிக்
கொண்டதே தவிற என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை.
தென்மேற்க்கு பருவ மழையும், தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில் என் தாயோடு பயனித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும் தருவாயில் நான் நனைத்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னை காத்து நின்று எனக்கு வரவேண்டிய ஜீரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில்
தப்பித்த ஆனந்தம்தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்த கருணையின் வடிவம் தெரியவில்லை.
ஆண்டுகள் கழிந்தன நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது. நாடோடிப்போல ஊர் சுற்றுவது. இரவு நேரக்காட்சி சினிமாக் காட்சிப் பார்து விட்டு இரவு நடுநிசியில் தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காக கண்னுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின் ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத்தான் வந்தததே தவிர என்னை ஒரு போர் வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை.
வந்தது என் கல்லூரி நாட்கள் ஊரைவிட்டு, என் குடும்பத்தை பிரிய நேறும் வேளை. இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் அன்னையின் கண்கள் குழமாகியது அதைக்கூட புரிந்துக் கொள்ள முடியா வண்ணம் கல்லூரிக் கனவுகள் என் கண்னை மறைத்துவிட்டது. கல்லூரியில் படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்... “ தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே.... சாப்டியா..? உடம்பு நல்லா இருக்காமா...? ரோட்ல நறையா வண்டிகள் வரும் பாத்துப் போடி ராஜா.... சிலவுக்கு பணம் இருக்கா...??? “ இப்படி கணிவின் முகவரியாய் என் தாய்.. நானோ.. “ இருக்கேம்மா..... எரிச்சல் பட்டுக் கொண்டு..... சரி.. சரி.. பணம் மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க... அப்புறம் பேசுறேன்...” என்று வெடுகெண்டு போனை கட் செய்யும்போது, பணத்தின் வருகைக்காகத்தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை.
ஆண்டுகள் கடந்தது... கல்லூரியையும் முடித்தேன்... எல்லோருக்கும் இடமலித்த வளைகுடா.. என்னையும் ஆரத்தழுவி அனைத்தது.... அப்போதுதான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை வெளிக்கொனர்ந்தது.. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை பாசத்துடன் ஊட்டிவிட்ட உணவின் சுவைத் தெரிந்தது.
கடும் குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போதுதான் என்னை போர்த்தி விட்டு என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவனைப்பின் ஆழம் தெரிந்தது... இப்படி பல பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவனைப்பை இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்...
என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்திய என் இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலைப்பேசி அழைப்பு.. அதே நேசிப்பின் வார்த்தைகள் அவளிடத்தில்... நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத் வெளிக்கொணற “ அம்மா உன்னை நேசிக்கிறேன் “ என்று சொல்ல வார்த்தை வராமல்... கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அனைக்கிறேன் தொலைப்பேசியை....
                                                                                                      நன்றி........லால் தமிழன்
MOTHER IS NOBLEST SOUL IN THE WORLD...............
I AGREE WITH...........IT.....

Tuesday, October 5

என் இனிய இலந்தை மக்களே............
அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.........